நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.;
வேலூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜோஷி, அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தீனன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.