ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (ஜூலை 15) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்.