காமராஜர் சிலைக்கு எம்எல்ஏ மரியாதை!
காமராஜர் சிலைக்கு மாநகர திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.;
மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் 122ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (ஜூலை 15) வேலூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாநகர திமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், 2ஆவது மண்டல குழு தலைவர் நரேந்திரன், மாமன்ற உறுப்பினர் முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.