கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.

கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு.;

Update: 2025-07-16 07:40 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள (டிரேடர்ஸ் )கடையின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்கள் கொள்ளை சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையோரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும், அதிமுக பிரமுகருமான சக்திவேல் என்பவர் ஓம் சக்தி டிரேடர்ஸ் என்ற பெயரில் மளிகை பொருட்கள் மற்றும் எலெக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு 10 மணிக்கு கடையை மூடிவிட்டு வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது நள்ளிரவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் கடையில் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ 42 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், நான்கு செல்போன்கள் உட்பட சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். வழக்கம்போல் இன்று காலையில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த சக்திவேல் கடையில் வைக்கப்பட்டிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடு போயிருப்பது தெரிய வந்து சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார் இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்

Similar News