திருப்பத்தூர் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்

திருப்பத்தூர் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார்;

Update: 2025-07-16 09:38 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார் திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வடக்கு ஒன்றியம், கதிரிமங்களம் ஊராட்சி, கலெக்டர் பங்களா எதிரில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியினை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று திடிர் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வீ.வடிவேல், மாவட்ட இளைஞரணி து.அமைப்பாளர் செந்தில்குமார், மு.ஊராட்சி மன்ற தலைவர்கள் பரமசிவன், குணசேகரன், ஊராட்சிமன்ற தலைவர் மாரிஇளையராஜா, கிளைக்கழக செயலாளர்கள் சாம்ராஜ், விஜயகுமார், சிவக்குமார், மதன்குமார், பெருமாள் மற்றும் கழக முன்னோடிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்

Similar News