ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு விழா!
ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு திறந்து வைத்தார்.;
வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்தில் ரூ.1.04 கோடியில் 2 ஊராட்சி மன்ற கட்டடங்கள், புதிய நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை வேலூர் மாவட்ட ஆட்சியர் வி.ஆர்.சுப்புலட்சுமி கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பூ.காஞ்சனா, கணியம்பாடி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா கமல்பிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், ஜெயலட்சுமி ஏழுமலை, சாத்துமதுரை ஊராட்சி மன்றத் தலைவர் ஆர்.ஜோதிலட்சுமி ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.