ராசிபுரம் பஸ் நிலையம் மாற்றத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, சரோஜா பங்கேற்பு..
ராசிபுரம் பஸ் நிலையம் மாற்றத்தை கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி, சரோஜா பங்கேற்பு..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதிமுக சார்பில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் தமிழக அரசை கண்டித்தும் ஆர்பாட்டம் நடந்தது. ராசிபுரம் பஸ் நிலையத்தை மாற்றும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், திமுக அரசின் பல்வேறு சட்டம் ஒழுங்கு சீரழிவு, போதை பொருள் புழக்கம், போன்றவற்றை கண்டித்து ராசிபுரம் புதிய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என அணைத்திந்திய அண்ணா திமுக பொதுச்செயலாளர் முன்னாள் முதல்வர் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் நாமக்கல் மாவட்ட கழக செயலாளர், கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் டாக்டர் வெ.சரோஜா முன்னிலை வகித்தார். இந்த ஆர்பாட்டத்தில் ராசிபுரம் பஸ் நிலையத்தினை & 8 கி.மீ. தொலைவில் உள்ள அணைப்பாளையம் ஊராட்சி பகுதிக்கு மாற்றம் செய்வதை கண்டித்தும், நகராட்சிக்கு நிரந்தமாக ஆணையாளரை நியமிக்காததை கண்டித்தும், திமுகவினரின் பல்வேறு சட்டவிரோத செயல்பாடுகளை கண்டித்தும் பேசப்பட்டது. மேலும் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி இதில் பேசுகையில், தமிழகத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தால் மாணவ மாணவிர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகிவிட்டது. மதுபான விற்பனை, கஞ்சா விற்பனை, கொலை, கொள்ளை போன்றவற்றால் அதிகரித்து இதனால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. அதிமுக திட்டங்களையும் திமுக நிறுத்தி விட்டது. தேர்தலை மனதில் வைத்து பொய்யான திட்டங்களை கொண்டு மக்களை ஏமாற்றப்பார்க்கிறது. மேலும் பொதுமக்கள் வரும் தேர்தலில் திமுக என்ன வாக்குறுதி அளித்தாலும் அதை நம்பி ஏமாறாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், மேலும் அதிமுக கொண்டு வந்த திட்டங்களை அவர் முடக்கி விட்டனர். மீண்டும் எடப்பாடி யார் தலைமையில் ஆட்சி அமைந்த உடன் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொண்டு வந்த அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும். பேருந்து நிலையம் இங்கிருந்து அங்கு மாறினான் பலரும் சிரமத்திற்கு ஆளாவார்கள் எனவே அது உடனடியாக அந்தத் திட்டத்தை கைவிட வேண்டும், இல்லையென்றால் அதிமுக ஆட்சி அமைந்ததும் இதே இடத்தில் பஸ் நிலையத்தை மீண்டும் கொண்டு வருவோம் என்றும் அவர் பேசினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சேகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், கே.பி.பி.பாஸ்கர், சி.சந்திரசேகரன், கலாவதி, மாநில வர்த்தத அணி இணைச் செயலர் ஸ்ரீதேவி மோகன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ராகா தமிழ்மணி, மாவட்ட பேரவை செயலர் இ.ஆர்.சந்திரசேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ஏ.வி.பி.முரளி, மாவட்ட அவைத் தலைவர் கந்தசாமி, ராசிபுரம் நகர செயலர் எம்.பாலசுப்பிரமணியம், இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ் குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் வேம்பு சேகரன், தாமோதரன், பொன்னுசாமி, ராஜா, சேந்தமங்கலம் ரமேஷ், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் இரண்டாவது வார்டு செயலாளர் ஜி. பூபதி, மற்றும் வழக்கறிஞர் பிரிவு தங்கதுரை, ராதா சந்திரசேகர், பிரபு, மகளிர் அணி செயலாளர் வைரம் தமிழரசி, நகர பொறுப்பாளர் வி.டி.தமிழ்செல்வன், நகர பொருளாளர் குண்டு கோபால், முன்னாள் நகர மன்ற துணை தலைவர் வெங்கடாசலம், இளைஞர் அணி முன்னாள் கவுன்சிலர் சீனிவாசன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட தலைவர் பி.டி.விஜய், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் அக்கரைப்பட்டி கண்ணன், நாமக்கல் மயில் சுந்தரம், ஐடி விங் விஷ்வா, உள்ளிட்ட மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு கழக பொறுப்பாளர்கள், பேரூர் கழக பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.