காஞ்சிபுரத்தில் சூரிய சக்தி விளக்கு சீரமைக்கப்படுமா?

வேடல் கிராமம் சாலை வளைவு பகுதியில், பழுதடைந்த நிலையில் உள்ள சூரிய சக்தி விளக்கை சீரமைக்க எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது;

Update: 2025-07-17 12:13 GMT
காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் விபத்து ஏற்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறை சார்பில், சூரிய சக்தி விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதில், வேடல் கிராமம் சாலை வளைவு பகுதியில் அமைக்கப்பட்ட சூரிய சக்தி விளக்கு பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால், மின்விளக்கு வசதி இல்லாத இப்பகுதியில் சாலை வளைவை கவனிக்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, வேடல் கிராமம் சாலை வளைவு பகுதியில், பழுதடைந்த நிலையில் உள்ள சூரிய சக்தி விளக்கை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Similar News