முத்தாயம்மாள் மெமோரியல் கலை அறிவியல் கல்லூரி
முத்தாயம்மாள் மெமோரியல் கலை அறிவியல் கல்லூரி;
கர்மவீரர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு முத்தாயம்மாள் மெமோரியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி & மேக்னம் தொண்டு நிறுவனம் சார்பில் இணைந்து நடத்திய முப்பெரும் கலை போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி சிறப்பித்தனர். இதில் தமிழ்பேச்சு போட்டி &ஓவிய போட்டி& ஆங்கிலக் கையெழுத்து போட்டி என மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பிரேம்குமார் , தாளாளர் , முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை, ஆனந்தா கல்வி குழுமம் தாளாளர் சக்திவேல்,மேக்னம் தொண்டு நிறுவனம் திட்ட தலைவர் சத்ய தாஸ் , கல்லூரியின் முதல்வர் முனைவர் சோமு போட்டியின் ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், NSS&YRC Co-ordinator பர்ணபாஸ் & சசிக்குமார் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள் வழங்கி பாராட்டு தெரிவித்து கௌரவித்தனர்..