வேலூர் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு!
வேலூர் மாநகராட்சி மேயர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.;
வேலூர் மாநகராட்சி 2 வது மண்டலத்திற்கு உட்பட்ட 27 வது வார்டு காகிதப்பட்டறை சிப்பந்தி காலனி பகுதியில் செல்லும் கானாற்று கழிவுநீர் கால்வாய் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு நேற்றிரவு பெய்த மழையால் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி மேயர் சுஜாதா சம்பவ இடத்திற்கு வந்து சுகாதார அலுவலர்களுடன் ஆய்வு செய்து ஜே.சி.பி மூலம் கழிவு நீர் கால்வாயை தூர்வாரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.