ஒரகடம் மேம்பாலத்தின் கீழ் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி
சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, மாட்டுத் தொழுவத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்;
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் --- சிங்கபெருமாள் கோவில், வண்டலுார் ---- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் பகுதியான ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துள்ளது. இப்பகுதியில் மாடுகளை வைத்திருப்பவர்கள், தங்களின் மாடுகளை தொழுவத்தில் கட்டி வைத்து பராமரிப்பது இல்லை. மாறாக அவை இரவு நேரங்களில் சாலையில் படுத்து ஓய்வெடுக்கிறது. ஒரகடம் மேம்பாலத்தின் கீழ், போக்குவரத்திற்கு இடையூறாக மாடுகள் சாலையை மறித்து நிற்பதால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி அடைகின்றனர். திடீரென சாலையின் குறுக்கே மாடுகள் ஓடுவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருவது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலையில் திரியும் மாடுகளை பிடித்து, மாட்டுத் தொழுவத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்கின்றனர்.