ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகனுக்கு சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்...
ராசிபுரம் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகனுக்கு சிறப்பு பூஜை பக்தர்கள் சாமி தரிசனம்...;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதுப்பாளையம் சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஸ்ரீ பால முருகன் திருக்கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்க காப்பு அலங்காரத்தில் எல்லை மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல் இக் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் சாமிக்கும் சிறப்பு பூஜைகள் அபிஷேகம் நடைபெற்று தங்கக்காப்பு சாத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஆடி முதல் வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.