ராசிபுரம் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம்..
ராசிபுரம் ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி வெள்ளி முன்னிட்டு பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சுவாமி சிவானந்தா சாலை பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இப்பதியைச் சேர்ந்த ஏளனமான பெண்கள் பொதுமக்கள் இந்திரா நகர் பகுதியில் இருந்து புதுப்பாளையம் சாலை மற்றும் முக்கிய சாலை வழியாக ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் மற்றும் முளைப்பாரி தீர்த்தம் குடம் ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் திருக்கோவிலில் வந்தடைந்து பின்னர் மாரியம்மனுக்கு பால், தயிர்,மஞ்சள், சந்தனம்,தேன், பஞ்சாமிர்தம்,இளநீர், பன்னீர் போன்ற பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.