கணவர் மீது நடவடிக்கை எடுக்க மனைவி கோரிக்கை!
பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (ஜூலை 18) வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.;
வேலூர் மாவட்டம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் இன்று (ஜூலை 18) வேலூர் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் எனக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது. 3 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் வேலைக்கு செல்லாமல், மதுவுக்கு அடிமையாகி தினமும் கொடுமை செய்கிறார். எனவே வேலைக்கு செல்லாமல் மது குடித்து விட்டு சித்ரவதை செய்யும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.