ஸ்ரீ நாகநாதேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜை!
ஸ்ரீ நாகநாதேஸ்வரர் ஆலயத்தில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று சிவகாம சுந்தரி அம்பாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் பள்ளிகொண்டா வேப்பங்கள் பகுதியில் உள்ள ஸ்ரீ நாகநாதேஸ்வரர் ஆலயத்தில், ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு இன்று (18.07.2025) சிவகாம சுந்தரி அம்பாளுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.