நெல்லையில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த நிலையில் இன்று காலை முதல் சாரல் மழையுடன் குளிர்ந்த நிலையில் வானிலை காணப்படுகின்றது.இதன் காரணமாக கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகள் போல் வானிலை முழுவதுமாக காட்சியளித்ததால் பொதுமக்கள்,வாகன ஓட்டிகள், மாணவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.