ரோட்டரி கிளப் ஆப் திருநெல்வேலி போருநை, ஸ்ரீ சக்தி மருத்துவமனை இணைந்து இலவச பொது மருத்துவ முகாமை டவுன் அப்பர் கிளாப்டன் பள்ளியில் வைத்து இன்று நடத்தியது. இதில் மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு முகாமினை துவங்கி வைத்தார்.இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பட்டனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு முதலுதவி சிகிச்சைக்கான கிட் பாக்ஸ் வழங்கப்பட்டது.