திரைப்பட நடிகர் சூர்யா ரசிகர்கள் ரத்த தானம்

திரைப்பட நடிகர் சூர்யா ரசிகர்கள் ரத்த தானம்;

Update: 2025-07-20 14:32 GMT
திருச்செங்கோட்டில் திரைப் பட நடிகர் சூர்யாவின் 50 வது பிறந்த நாளை ஒட்டி 50க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவ மனைக்கு ரத்த தானம் செய்தனர்* திரைப்பட நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி நாமக்கல் மேற்கு மாவட்ட சூர்யா தலைமை நற்பணி மன்றத்தின் சார்பில் ரத்த தானம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருச்செங்கோடு வேலூர் சாலையில் உள்ள ஔவைக்கல்வி நிலையத்தில் நடந்த ரத்ததான முகாமிற்குசூர்யா ரசிகர் மன்ற நாமக்கல் மாவட்டத் தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். இதில் 50-க்கும் மேற்பட்ட சூர்யா ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ரத்த தானம் செய்தனர். இதனைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இந்த ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு ரத்த தானத்தை பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில்சூர்யா ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர் கந்தசாமி மாநில செயற்குழு உறுப்பினர் ஜெகதீசன் மாவட்ட பொருளாளர் சின்ராஜ் மாவட்ட கவுரவத் தலைவர் ரமேஷ் கார்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News