மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு
மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்வு;
திருச்செங்கோடு நகரம் 25வது வார்டு பாலுத்து தெருவில் உள்ள ஸ்ரீ சின்ன மாரியம்மன் கோவில் சார்பாக 2024- 2025 ஆம் கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வு பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற 12 மாணவிகள் 9 மாணவர்கள் என 21 மாணவ மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சேலம் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் டி. எம். செல்வகணபதி கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் நிகழ்ச்சிக்கு செல்வி சின்ன மாரியம்மன் கோயில் ஊர் நல சங்க தலைவர் ராஜா என்கிற முத்து கணபதி தலைமை வகித்தார். ஊர் நலச்சங்க நிர்வாகி ராஜா என்கிற ராஜமாணிக்கம் கொத்துக்காரர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர் பிரேமா அனைவரையும் வரவேற்றார். திருச்செங்கோடு நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ் பாபு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி தலைவர் சுரேஷ்பாபு, தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற ஆசிரியர் முத்துசாமி, வழக்கறிஞர் உலகநாதன், நாமக்கல் அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசியர் ரகுபதி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் திருச்செங்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளர்கிருஷ்ணன், திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் வளர்மதி, நகர்மன்ற உறுப்பினர்கள் அண்ணாமலை புவனேஸ்வரி உலகநாதன் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் செங்குட்டுவன்25வது வார்டு திமுக செயலாளர் பிரபாகரன், தொழிலதிபர் மலரவன், அருள்மிகு மாரியம்மன் கோவில் நிர்வாக குழு தலைவர் அருள், நகராட்சி முன்னாள் மேலாளர் குமரேசன் ஆகியோர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக சேலம் நாடாளுமன்றத் தொகுதி மக்களவை உறுப்பினர் டி.எம். செல்வகணபதி கலந்து கொண்டு 10ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 9 பேர் 12ம் வகுப்பு தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற 12 பேர் என 21 மாணவ மாணவிகளுக்கு ஊக்கத் தொகை, பாராட்டு சான்றிதழ், மற்றும் கேடயம் வழங்கி பேசியபோது கூறியதாவது. படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை என்பது அவர்கள் உழைப்புக்கு வழங்கப்படும் அங்கீகாரம். வாழ்க்கை போக்கை மாற்றக்கூடியது கல்வி தான். மண்ணிலும் சேற்றிலும் புரண்டு கொண்டிருந்த வர்களை சரியான பாதைக்கு அழைத்துச் செல்ல உதவுவது கல்வி . குடும்பத்தில் ஒரு பெண் படித்தால் ஒரு சந்ததியே மேன்மை நிலையை அடையும். கல்வி தான் ஒருவர் வாழ்க்கையை உயர்த்தும். அரசியலில் மிகப் பெரும் தலைவராக இருந்த ஜெயலலிதாவை சந்திக்கவும் அறிமுகப்படுத்திக் கொள்ளவும் எனக்கு கல்வி ஒரு கருவியாக இருந்தது. இதே போலத்தான் தலைவர் கலைஞரையும் முரசொலி மாறனையும் சந்திக்கவும் எம்பியாக பாராளுமன்றத்தில் பேசவும் அப்துல் கலாமின் பாராட்டையும் பெற உதவியது கல்விதான் இன்று உதவித்தொகை பெறும் 21பேரில் 12 பேர் பெண்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாக உள்ளது.இது முடிவல்ல இதுதான் ஆரம்பம் என்பதை கருத்தில் கொண்டு எந்த துறையாக இருந்தாலும் அதில் உழைத்து திறமையை காட்டி முன்னுக்கு வர வேண்டும் இதோடு மன நிறைவு அடைந்து விடக்கூடாது சாதிக்க வேண்டும் என்கிற வெறி இருந்தால்தான் உங்கள் வாழ்க்கை உயரும். கடின உழைப்பு விடாமுயற்சி இல்லாவிட்டால் வாழ்க்கையில் உயர முடியாது. எந்த ஒன்றையும் கற்றுக் கொள்ளவோ தெரியாததை மற்றவரிடம் கேட்கவோ தயக்கம் காட்டக்கூடாது தயக்கம் காட்டினால் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது எனக் கூறினார்.