வெள்ளி கவச அலங்காரத்தில் முருகர் பக்தர்களுக்கு காட்சி!
புது வசூர் தீர்த்தகிரி மலையில் உள்ள முருகர் கோயிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி அடுத்த புது வசூர் தீர்த்தகிரி மலையில் உள்ள முருகர் கோயிலில் ஆடி மாத கிருத்திகையை முன்னிட்டு இன்று (ஜூலை 20) வள்ளி தெய்வானை, சமேத வடிவேல் சுப்பிரமணிய சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.