மோட்டார் சைக்கிள் மோதி எருமை மாடு பலி இரண்டு பேர் படுகாயம்

மோட்டார் சைக்கிள் மோதி எருமை மாடு பலி இரண்டு பேர் படுகாயம் தாராபுரம் காவல்துறை விசாரணை;

Update: 2025-07-21 00:47 GMT
தாராபுரம் அருகே உள்ள குப்பிச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த கருப்புசாமி மகன் சேதுபதி (வயது 25). தெக்கலூரை சேர்ந்த தண்டபாணி மகன் ஸ்ரீபதி (18). இவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் தாராபுரத்தில் இருந்து பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்தனர். அப்போது தாராபுரம் காமராஜர்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி மாரியம்மாள் என்பவர் அவருக்கு சொந்தமான எருமை மாட்டை சாலையில் பிடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்தார். அப்போது சேதுபதி, ஸ்ரீபதி வந்த மோட்டார் சைக்கிள் எருமை மாடு மீது மோதியது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளுடன் விழுந்த 2 பேரும் காயம் அடைந்தனர். ஆனால் மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் எருமை மாடு இறந்தது. இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் சைக்கிளை ஓட்டியவர்கள் மது போதையில் அதிவேகமாக வந்ததாக போலீசார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிள் எருமை மாடு மீது மோதியதில் எருமை மாடு இறந்து போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News