மணிமங்கலம் பாரதி நகரில் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா

ஸ்ரீபெருமந்தூர் அடுத்த மணிமங்கலம் பாரதி நகரில் தேவி கருமாரியம்மன் கோயில் தீ மிதி திருவிழா....10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;

Update: 2025-07-21 05:09 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் அடுத்த மணிமங்கலம் ஊராட்சி பாரதி நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 29 ஆம் ஆண்டு கூழ் வார்த்தல் திருவிழாவும், 25 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா கடந்த 10ம் தேதி கணபதி ஹோமம், பந்தக்கால் நடும் நிகழ்ச்சி மற்றும் தீ மிதிக்கும் பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதையடுத்து கிராம தேவதைகளான செல்லியம்மன், ஸ்ரீதாமரை கன்னியம்மன், கங்கையம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ தேவி கருமாரியம்மனுக்கு அபிஷேகம், மகா தீபாரதனையுடன் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும் வெகு சிறப்பாக நடைப்பெற்றது. மாலை தீமிதி திருவிழாவில் மாலை அணிந்து விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் 10அடி அலகு குத்தி தீமித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீ மிதி திருவிழாவை முன்னிட்டு மூலவர் ஸ்ரீதேவி கருமாரியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து இறுதியாக வாணவேடிக்கை நிகழ்ச்சிஇதையடுத்து அம்மன் மிகவும் ஆக்ரோசமாக வெளியே வந்து வதம் செய்து பின்னர் சாந்தமடைந்து இறங்கும் கட்சியின் மிகவும் தத்துரிபமாக அமைக்கப்பட்ட வடிவத்தை பார்த்து பக்த்தர்கள் தங்களது செல் போனில் படம்பிடித்து மகிழ்ந்தார்கள் இதில் மணிமங்கலம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டு ஸ்ரீதேவி கருமாரி அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.

Similar News