வேலூரில் டெங்கு கொசு ஒழிப்பு பணி!
மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது.;
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.இந்த மழையால் ஆங்காங்கே தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது. மாநகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களை கொண்டு தேங்கிய தண்ணீரை அகற்றும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை ஒரு வார்டுக்கு 5 பணியாளர்கள் வீதம் 60 வார்டுகளுக்கு 300 பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்