தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ராசிபுரம் கோவிலில் தரிசனம்..
தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ராசிபுரம் கோவிலில் தரிசனம்..;
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளார். இந்த நிலையில் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் புஸ்ஸி என். ஆனந்த் சாமி தரிசனம் செய்தார். சாமி தரிசனம் செய்து தொடர்ந்து கோவிலை வலம் வந்து நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நிர்வாகிகளுக்கு கோவில் பிரசாதம் வாழைப்பழம் வழங்கினார் . அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜெ.ஜெ.செந்தில் நாதன், மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்..