இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பெரம்பலூர் மாவட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம்

ரத்ததான முகாம் நடத்துதல். எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணி நடத்துதல் .உறுப்பினர்களின் எண்ணிக்கை யை அதிகரித்தல். அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டுதல்.;

Update: 2025-07-23 16:15 GMT
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி. மாவட்ட கிளை பெரம்பலூர். ஆண்டு பொதுக்குழு கூட்டம். . இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி பெரம்பலூர் மாவட்ட கிளையின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று 23.07.2025 புதன்கிழமை மதியம் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் வழிகாட்டுத்தல்படி மாவட்ட ஆட்சியரின் நேர்முக அலுவலரும் IRCS ன் துணை தலைவருமான கே. குணசேகரன் தலைமை யில் ஆண்டு பொதுக் குழு கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு. அமைப்பின் மேலான் தலைவர் மருத்துவர் M.தங்கராஜ் அமைப்பின் துணைத் தலைவர் நா. ஜெயராமன் முன்னிலை வைத்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில். அமைப்பின் கௌரவ செயலாளர். வெ. ராதாகிருஷ்ணன் சென்றாண்டு செயல்பாடுகள் அடங்கிய ஆண்ட றிக்கை வாசித்தார். மேலும் ஆற்றிய மற்றும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விளக்கி பேசினார். கௌரவ பொருளாளர்.மு.ஜோதி வேல் அமைப்பின் சென்ற ஆண்டு வரவு செலவு கணக்கினை வாசித்து சபையோர் முன்னிலையில் சமர்ப்பணம் செய்தார். மேலும் புதிய உறுப்பினர்களுக்கு அமைப்பின் அடையாள அட்டையை வழங்கி கௌரவிக்கப் பட்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக. அமைப்பின் செயற்குழு உறுப்பினர். மருத்துவர்
கோசிபா
அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். மேலும் அமைப்பின் செயற்குழு உறுப்பினர் த. மாய கிருஷ்ணன் அவர்கள் நன்றி கூற ஆண்டு பொது குழு கூட்ட நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. கீழ்க்கண்ட முன்மொழிவுகள் விவாதிக் கப்பட்டு ஏகமனதாக தீர்மானமாக ஏற்றுக்கொள்ளப் பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1.அமைப்பிற்கென்று தனியிடம் வேண்டுதல். மேலும் பல்வேறு கிராம பஞ்சாயத்துக்கள். நகராட்சிகள். பேரூராட்சிகள். ஆகியவற்றிடம் இருந்து சந்தவாக. நிதியை பெற்று தரக்கோருதல். 2. ரத்ததான முகாம் நடத்துதல். 3. எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பு ணர்வு பேரணி நடத்துதல். 4. .உறுப்பினர்களின் எண்ணிக்கை யை அதிகரித்தல். 5. அனைத்து உறுப்பினர்களுக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டுதல். உள்ளிட்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற் றப்பட்டது.

Similar News