சமரச தீர்வு மையம் குறித்து விழிப்புணர்வு!
வழக்குகளில் சமரச தீர்வு காண்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;
வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வழக்குகளில் சமரச தீர்வு காண்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி இளவரசன் தலைமை தாங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கினார். இதில் நீதிபதிகள், வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.