வேலூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வேலூரில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.;
ஆடி அமாவாசை ஊஞ்சல் சேவையை முன்னிட்டு மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வேலூர் மண்டலம் சார்பில் வேலூரில் இருந்து 30 பஸ்களும், ஆற்காட்டில் இருந்து 15 பஸ்களும், திருப்பத்தூரில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்படுகிறது என வேலூர் மண்டல அலுவலகம் அறிவித்துள்ளது. பக்தர்களின் நலன் கருதி இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.