மருந்தாளுநர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காலியாக உள்ள 700க்கும் மேற்பட்ட மருந்தாளுனர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். .