எல்லை அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை!
எல்லை அம்மன் திருக்கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு இன்று மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு சுவாமி தரிசனம் செய்தார்.;
வேலூர் மாவட்டம் வெட்டுவாணம் அருள்மிகு எல்லை அம்மன் திருக்கோயிலில் ஆடி இரண்டாம் வெள்ளியை முன்னிட்டு இன்று (ஜூலை 25) மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கோ பூஜையில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார். அப்போது அவருடன் பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரகாஷ், ஒன்றிய துணை செயலாளர் கணபதி, பேரூராட்சி தலைவர் சுபபிரியா குமரன் ஆகியோர் இருந்தனர்.