வேலூர் அருகே பச்சிளம் குழந்தை பலி!
வேலூர் அருகே பச்சிளம் குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர், கருகம்புத்தூரை சேர்ந்த பிரபாகரன் (31), இவரின் மனைவிக்கு கடந்த 4ம் தேதி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. அப்போது குழந்தையின் சிறுநீரகங்கள் வீங்கி இருந்ததால் 10 நாட்கள் சிகிச்சை அளித்து வீட்டிற்கு அனுப்பினர். இந்நிலையில் குழந்தை எவ்வித அசைவின்றி கிடந்தது. இதையடுத்து பென்ட்லென்ட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் குழந்தை இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.