கெலமங்கலம்:வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.

கெலமங்கலம்:வீடுகளின் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர்.;

Update: 2025-07-25 11:51 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், கொடகரை கிராமத்தில், தாட்கோ மூலம், மலைவாழ் மக்களுக்கு அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.5 கோடியே 78 இலட்சத்து 73 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளின் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதா உள்ளிட்ட பலர் உள்ளனர்.

Similar News