திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 44வது வார்டு மாநகராட்சி ஆசாத் ஆரம்பப்பள்ளியில் நேற்று பள்ளி மேலாண்மை கூட்டம் நடைபெற்றது. இதில் 44வது வார்டு கவுன்சிலர் ஹாபிஸ் முகைதீன் அப்துல் காதர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில் ஆரம்ப பள்ளியை நடுநிலை பள்ளியாக ஆக்குவதற்கு கூடுதல் கட்டிடம் கட்ட மாநகராட்சியிடம் கேட்டுக் கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.