திருநெல்வேலி மாவட்டம் மானூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள மேல பிள்ளையார்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேற்று (ஜூலை 25) மாணவர்களுக்கு மானூர் காவல் ஆய்வாளர் சந்திரசேகரன் புகையிலை, கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.