ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்!
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.;
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று (ஜூலை 26) இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 2009ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதிக்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.