அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு!
அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இன்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உமா ஆய்வு மேற்கொண்டார்.;
வேலூர் மாவட்டம் அடுக்கும்பாறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், இன்று (ஜூலை 26) மாவட்ட கண்காணிப்பு அலுவலர் உமா ஆய்வு மேற்கொண்டார். அப்போது குழந்தைகள் நல பிரிவு மற்றும் மருத்துவமனையில் உள்ள வார்டுகளை ஆய்வு செய்து, மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, ஆட்சியர் சுப்புலட்சுமி, மருத்துவ கல்லூரி முதல்வர் ரோகிணி தேவி உட்பட பலர் உடன் இருந்தனர்.