ராணிப்பேட்டையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ராணிப்பேட்டையில் பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்;
ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டையில் நேற்று மாலை பாட்டாளி மக்கள் கட்சியின் ராணிப்பேட்டை புதிய மேற்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ள இளவழகன் தலைமையில் நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நடைபயணம் மேற்கொள்ள வருகை தரும் பாமக தலைவர் அன்புமணி ராமதாசுக்கு வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.