கலவை அருகே மாணவியை வெட்டியவர் வாலிபர் கைது
கலவை அருகே மாணவியை வெட்டியவர் வாலிபர் கைது;
கலவை அருகில் உள்ள மேல்நேத்தப் பாக்கம் கிராமத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒரு தனியார் கல்லூரி யில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டு கல்லூரி பஸ்சில் இருந்து கீழே இறங்கி மேல்நேத்தப்பாக்கம் கூட் கைதான ரோடு வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கவியரசன் கொண்டிருந்தார். அப்போது வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கல்லூரி மானவியை வலது கழுத்திலும், இடது கை மணிக்கட்டு பகுதியிலும் வெட்டி விட்டு மோட்டார்சைக்கிளில் தப்பி சென்று விட்டார். பலத்த காயம் அடைந்த மாணவியை அங்கிருந்தவர்கள் மீட்டு கலவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் . அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.மாணவியை கத்தியால் வெட்டி விட்டு தப்பியோடிய கவியரசன் (வயது 21) என்பவரை கலவை போலீசார் தேடிவந்தனர். நேற்று காலை கலவையை அடுத்த வெள்ளம்பி கிராம ஏரிக்க ரையில் பதுங்கி இருந்த கவியரசனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.