ஆற்காடு அருகே நாய் குரங்குகள் கடித்து மயில் பலி
ஆற்காடு அருகே நாய் குரங்குகள் கடித்து மயில் பலி;
ஆற்காடு அரசு மருத்துவமனை அருகில் கடந்த ஒரு வாரமாக பெண் மயில் ஒன்று சுற்றித்திரிந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று ஆற்காடு அரசு மருத்துவமனையில் அந்த மயில் வந்தபோது அங்கிருந்த குரங்குகளும் மற்றும் நாய்களும் மயிலை கடித்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த மயிலுக்கு அங்கிருந்த ஊழியர்கள் முதலுதவி செய்தனர். ஆனால் மயில் இறந்து விட்டது. இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரி வித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் சென்று மயிலை அடக்கம் செய்தனர்.