ஆற்காட்டில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்

ஆற்காட்டில் பா.ம.க. மாவட்ட பொதுக்குழு கூட்டம்;

Update: 2025-07-28 04:23 GMT
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க. பொதுகுழு கூட்டம் ஆற்காட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஜானகிராமன், லட்சுமணன், மணிவண்ணன், ராஜேந்திர பிரசாத், பூண்டி மோகன், அமுதா சிவா, மகேந்திரன் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.எல். இளவழகன் வரவேற்றார். கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் வருகிற ஆகஸ்ட் மாதம் 2 மற்றும் 3-ந் தேதிகளில் ராணிப்பேட்டை மேற்கு மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கும் தமிழக மக்களின் உரிமை மீட்பு நடைபயணத்தில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், இளைஞர்கள், மகளிர் அணியினர் திரளாக கலந்து கொள் வது. பொதுமக்கள் அறியும் வண்ணம் துண்டு பிரசுரங்கள் வழங்குவது, வாலாஜா மற்றும் ஆற்காடு பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது, ராணிப்பேட்டையில் குரோமியம் கழிவுகளை அகற்ற அன்புமணியிடம் தெரிவிப்பது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் எம்.கே.முரளி, ப.சரவணன், நகர செயலாளர் பாஸ்கர் உள்பட கட்சி நிர்வாகி கள், பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News