உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை !
உடற்பயிற்சி கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை !;
பாணாவரம் ஊராட்சியில் 2016-2017-ம் நிதியாண்டில் சுமார் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா மற்றும் நவீன உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டது. பூங்காவில் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த விளையாட்டு உபகரணங்களும், உடற்பயிற்சி கூடத்தில் நவீன உடற்பயிற்சி சாதனங்களும் பொருத்தப்பட்டன. இவை அனைத்தும் நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாததால் அனைத்தும் வீணாகி விட்டது. இளைஞர்கள் தினசரி உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் அமைக்கப்பட்ட இந்த உடற்பயிற்சி கூடம் சரிவர பராமரிக்கப்படாமல் பூட்டியே கிடப்பதால் உடற்பயிற்சி உபகரணங்கள் துருப்பிடித்து, உடைந்து அங்கு செடி கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. மேலும், சிறுவர்கள் விளையாட்டு பூங்காவில் பல இடங்களில், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டிய பாதையில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளன. பலமுறை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வந்து சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை என அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் தெரிவித்த னர். எனவே மாவட்ட நிர்வாகம் இந்த உடற்பயிற்சி நிலையத்தை சீரமைத்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், அதனை சரியாக பராமரிக்க தனி ஆட்களை நியமிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.