கரூர்-இணைய வழியில் களவாடப்பட்ட பணம், தொலைத்த செல் போன் ஒப்படைப்பு.

கரூர்-இணைய வழியில் களவாடப்பட்ட பணம்,தொலைத்த செல் போன் ஒப்படைப்பு.;

Update: 2025-07-28 11:17 GMT
கரூர்-இணைய வழியில் களவாடப்பட்ட பணம், தொலைத்த செல் போன் ஒப்படைப்பு. கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று சைபர் கிரைம் காவல்நிலையம் சார்பில் இணைய வழி குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் கூடுதல் கண்காணிப்பாளர் பிரபாகரன்உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்தில் சைபர் கிரைம் போலீசார் துரிதமாக செயல்பட்டு இணையதளம் மோசடியில் பணம் இழந்த 17 நபர்களுக்கு ரூ.85 லட்சத்து 18 ஆயிரத்து 105 ஐ உரியவர்களுக்கு திருப்பி ஒப்படைத்தனர். மேலும், கரூர் மாவட்டத்தில் பல்வேறு காவல் காவல் நிலைய பகுதிகளில் செல்போன்களை இழந்த 163 நபர்களின் செல்போன்களை துரிதமாக கண்டுபிடித்து மீட்டு உரியவர்களிடம் வழங்கினர். களவாடப்பட்ட பணம்,தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்த காவல்துறையினரை பாராட்டி அவருக்கு நற்சான்று மற்றும் வெகுமதியை மாவட்ட கண்காணிப்பாளர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

Similar News