ஓடும் பேருந்தில் லேப்டாப் திருட்டு- போலீசார் விசாரணை!
ஓடும் பேருந்தில் லேப்டாப் திருட்டு- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;
வேலூர் வேலப்பாடியை சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் (19), அவருடன் படிக்கும் மாணவி புதிய பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது இருவரும் தாங்கள் கொண்டு வந்த 2 லேப்டாப் பைகளை இருக்கையின் கேபினில் வைத்துள்ளனர். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது 2 லேப்டாப்கள் திருட்டு போனது. இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.