இலவச கண் பரிசோதனை முகாம்!
சத்துவாச்சாரி பகுதியிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.;
வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரி பகுதியிலுள்ள மாவட்ட அறிவியல் மையத்தில், தனியார் மருத்துவமனையுடன் இணைந்து நாளை (ஜூலை 29) காலை 9.30 மணி முதல் மதியம் 3 மணி வரை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம் என வேலூர் மாவட்ட அறிவியல் மையம் அலுவலர் (பொறுப்பு) சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.