முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித் தக்வா பொதுக்குழு கூட்டம்
தூத்துக்குடியில் முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித் தக்வா பொதுக்குழு கூட்டம் ஜமாத் தலைவர் உசேன் தலைமையில் நடைபெற்றது.;
தூத்துக்குடியில் முஸ்லிம் ஜமாஅத் மஸ்ஜித் தக்வா பொதுக்குழு கூட்டம் ஜமாத் தலைவர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மூத்த வழக்கறிஞர் முஹம்மது உசேன் மற்றும் செய்யது இபுராஹீம் பாதுஷா நடுவர்களாக பணியாற்றி கூட்டத்தை சிறப்புடன் நடத்தி வைத்தார்கள். கூட்டத்தில் "தூத்துக்குடி முஸ்லிம் ஜமாஅத் ஜம்யிய்யத்து, அஹ்லில் குர் ஆன் வல் ஹதீஸ் என்ற ஜமாத்துடன் இணைக்கப்பட்டு ஜமாத்தின் ஜமா அத்தின் சட்ட முறைகளை பின்பற்றி பணிகள் செய்வோம் என்று ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது. ஜமாத்தின் புதிய தலைவராக உசேன், செயலாளர் சம்சுதீன், பொருளாளர் முஜிபுர் ரஹ்மான், துணைத் தலைவர் அப்துல் கனி, துணைச் செயலாளர் சபீக் அலி, நிர்வாக உறுப்பினர்கள் ஹபீப் ரஹ்மான், சம்சுமறைக்கார் ஆகியோர் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். மூத்த வழக்கறிஞர் அப்துல் பாஸீத் மார்க்க சிறப்புரையாற்றினார். விழாவில் அனைவருக்கும் ஜமாத் சார்பாக குர்ஆன் வழங்கப்பட்டது இறுதியில் செயலாளர் சம்சுதீன் நன்றியுரை வழங்கினார்.