உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை பார்வையிட்ட அமைச்சர்.
மதுரையில் நடைபெற்ற" உங்களுடன் ஸ்டாலின்" முகாமினை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்தார்.;
மதுரையில் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், இன்று (ஜூலை .31) மதுரை மாநகராட்சி மண்டலம் 3 பெரியார் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள சுற்றுலா அரங்கில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை தொடங்கி வைத்து துறை சார்ந்த அரங்குகளில் மனுக்கள் பதிவு செய்வதை பார்வையிட்டு மனுதாரர்களுடன் கலந்துரையாடினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார் மாணவர் மேயர் இந்திராணி துணை மேயர் நாகராஜன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.