ஜெயங்கொண்டத்தில் பூமியை குளிர்வித்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி *

ஜெயங்கொண்டத்தில் பூமியை குளிர்வித்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்*;

Update: 2025-07-31 10:15 GMT
அரியலூர், ஜூலை.31- ஜெயங்கொண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருந்தது   ஜெயங்கொண்டம் உள்ளிட்ட நகரப் பகுதியில்  வெப்ப அலை வீசியதால் பொதுமக்கள் வெளியில் வரவே தயங்கி வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்தனர் இந்நிலையில் ஜெயங்கொண்டம் பகுதியில் மதியம் 2 மணிக்கு மேல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு கருமேகங்கள் திரண்டு குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவியது மேலும்  தூரலாக தொடங்கிய மழை பலத்த மழையாக இடி மின்னலுடன் பெய்தது இதனால் சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் வழிந்தோடியதால் வாகன ஓட்டிகள் பாதசாரிகளும் மிகவும் பாதிக்கப்பட்டனர் இருந்தாலும் இம்மழையால் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து விடுபட்டு குளிர்ச்சியான சீதோசன நிலை நிலவி வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் ஜெயங்கொண்டம் பகுதியில் பெய்த இந்த மழையினால் கோடை உழவு பணி மற்றும் சாகுபடிப்படியை விவசாயிகள் மேற்கொள்ள  பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Similar News