தந்தை மகன் கொலை வழக்கு ஸ்ரீதர் வழக்கு விசாரணைக்கு ஆஜர்
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் வழக்கு விசாரணைக்கு ஆஜர்;
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் , வழக்கில் தான் அபூர்வராக மாற விரும்புவதாக மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஏற்கனவே நீதிபதி முத்துக்குமரன் முன்னிலையில் விசாரணை நடைபெற்ற போது கொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பென்னிக்ஸ் குடும்பத்தினர் முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதரை அப்ரூவராக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து ஸ்ரீதர் தனது தரப்பு வாதத்தை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 31ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் வழக்கு விசாரணைக்காக மதுரை மத்திய சிறையில் இருந்த முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் காவல்துறை பாதுகாப்புடன் மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர்.