கொல்லிமலை அரப்பளீஸ்வரர் கோவிலில் ஆடிப்பெருக்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உள்பிரகாரம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி,மாலை திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.வருடந்தோறும் சுவாமி திருக்கல்யாண உற்சவத்தை காளப்பநாயக்கன்பட்டி சிவில் காண்ட்ராக்டர் உழவன்;

Update: 2025-07-31 12:47 GMT
கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னன் கொல்லிமலையை ஆண்டதாகவும், வளப்பூா் நாடு பகுதியில் விவசாய நிலத்தில் சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்தை மீட்டு அறம்வளா்த்த நாயகி உடனுறை அறப்பளீஸ்வரா் கோயிலைக் கட்டியதாகவும் வரலாற்று தகவல்கள் உண்டு. இந்த கோவிலில் ஆடிப்பெருக்கு விழா ஜூலை -31 ஆம் தேதி வியாழக்கிழமை காலை அங்குள்ள கொடி மரத்தில் அலங்கரிக்கப்பட்ட கொடியினை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி, மங்கள வாத்தியங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சிவ பெருமானுக்கும், கொடி கம்பத்திற்கும் மஞ்சள், திருமஞ்சனம், பால், தயிர், இளநீர், விபூதி, பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு அபிசேகங்கள், சிறப்பு ஆராதனைகள் நடந்தது. பின் உற்சவமூர்த்தி உட்பிரகாரத்தில் வலம் வருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஆகஸ்ட் -1 வெள்ளிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உள்பிரகாரம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி , மாலை சுவாமி அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெறும், ஆகஸ்ட் 2ம் தேதி சனிக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், உள்பிரகாரம் வீதிஉலா வரும் நிகழ்ச்சி,மாலை திருக்கல்யாண உற்சவம், சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது.வருடந்தோறும் சுவாமி திருக்கல்யாண உற்சவத்தை காளப்பநாயக்கன்பட்டி சிவில் காண்ட்ராக்டர் உழவன் & கோ ஆர்.வேலுசாமி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
ஆகஸ்ட் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி-18 அன்று அதிகாலை சந்திரசேகரர் அம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா, மதியம் சோமஸ்கந்தர் பல்லக்கில் சுவாமி வீதி உலா, தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதையடுத்து ஆகஸ்ட் 4-ந் தேதி திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், செய்யப்பட்டு, மதியம் வசந்த உற்சவம் , திருத்தேரோட்டம் ,மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று வளப்பூர் நாடு மற்றும் சேளூர்நாடு மக்களை வழியனுப்பும் திருவிழாவுடன் முடிவடைகிறது.முன்னதாக கொடியேற்று விழாவில் கொல்லிமலை, சேந்தமங்கலம், நாமக்கல், சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார்/ உதவி ஆணையர் இரா.இளையராஜா , செயல் அலுவலர் மு.சுந்தரராசு மற்றும் திருக்கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர். இத்திருவிழாவை முன்னிட்டு கோவிலின் இரு புறங்களிலும் வியாபாரிகள் கடைகளை அமைத்து வருகின்றனர்.

Similar News