ஆடு திருடிய மூவர் கைது
தேவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மேற்கண்ட ஆடு திருடிய ஆகாஷ் செந்தில் கருப்பையா ஆகியோரை பிடித்தனர். கொடியரசு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர் தப்பிச் சென்ற கொடியரசு வை வலைவீசி;
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கைப்பெரம்பலூர் கிராமத்தில் ஆடு திருடிய மூவர் கைது தப்பியோடிய ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலை வீச்சு கிழுமத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கைப்பெரம்பலூர் ரோட்டில் கருப்பட்டங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி தேவி (45) என்பவர் தனக்கு சொந்தமான ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்திட்டக்குடி நகராட்சி வதிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த கொடியரசு என்பவர் தனது நண்பர்கள் வதிஷ்டபுரம் கிராமத்தைச் சேர்ந்த நேரு மகன் ஆகாஷ் (25) கலியன் மகள் கருப்பையா (19) மற்றும் பெரியார் நகரை சேர்ந்த மணவாளன் மகன் செந்தில் (38) ஆகியோரை ஏற்றிக்கொண்டு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் அங்கு மேய்ந்து கொண்டிருந்த தேவியின் இரண்டு ஆடுகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு செல்ல முயன்றனர். இதைக் கண்ட அதிர்ச்சி அடைந்த தேவி சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மேற்கண்ட ஆடு திருடிய ஆகாஷ் செந்தில் கருப்பையா ஆகியோரை பிடித்தனர். கொடியரசு ஆட்டோவை ஓட்டிக்கொண்டு தப்பிச் சென்று விட்டார்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர் தப்பிச் சென்ற கொடியரசு வை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.