ஒரு மணி நேரத்துக்கு மேலாக வெளுத்து வாங்கிய மழை
பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி;
பெரம்பலூர் சுற்றுப்புற பகுதிகளில் பழத்த மழை. பெரம்பலூர் அதன் சுற்றுபுற பகுதிகளில் கடந்த ஓரிரு தினங்களாக பகல் நேரத்தில் கோடை காலம் போல் வெயிலின் தாக்கம் உணரமுடிந்தது. இதனிடையே 31-07-2025 இன்று காலையில் வெயில் அதிகரித்து காணப்பட்ட நிலையில் பிற்பகலில் வானத்தில் ஆங்காங்கே கருமேகங்கள் திரண்டு காணப்பட்ட நிலையில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, செங்குணம், அருமடல், நால்ரோடு , துறைமங்கலம் , பழைய பேருந்து நிலையம் புதிய பேருந்து நிலையம், உட்பட பெரம்பலூர் சுற்றுபுறத்தின் பகுதிகளில் இரவில் தூரல் மழை பெய்ய ஆரம்பித்தது படிப்படியாக இடி மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.